வரலாற்றறிஞர்
எரிக் ஹாப்ஸ்பாம் (1917-2012)
கா.அ.மணிக்குமார்
'மார்க்ஸ் இல்லாதிருந்திருந்தால் வரலாற்றில்
எனக்கொரு தனியார்வம் உண்டாகியிருக்காது' என்ற எரிக் ஹாப்ஸ்பாம் புரட்சியின் காலம், மூலதனத்தின் காலம், பேரரசின் காலம், தீவிரங்களின் காலம், தேசம் மற்றும் தேசியம், எப்படி இவ்வுலகை மாற்றுவது, ஆதிகால கலகக்காரர்கள் உள்ளிட்ட பல நூல்களின்
ஆசிரியர். 95 வயதில், கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி காலமாகும் வரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து
மறைந்தவர். அதனாலேயே பதவி உயர்வுகளும், அங்கீகாரங்களும் மறுக்கப்பட்டவர். 'குழந்தைப் பருவம் முதல் அரசியலில்
மூழ்கியிருந்ததால் நான் வாழ்நாள் கம்யூனிஸ்டானேன். அக்டோபர் புரட்சியின் கனவு இன்னும் என்னுள்
இருக்கிறது. மானுட விடுதலை என்பது மாபெரும் விசயம் என நான் இன்றும் நினைக்கிறேன்' என்றெல்லாம் அவரே பதிவு
செய்திருக்கிறார். புது இடதுசாரிகள் ஒரு மார்க்சிய முகமூடிக்குப் பின்னால் இருந்து
கொண்டோ, அல்லது
அரசியலற்றதும், அரசியலுக்கு
எதிரானதுமான கலாச்சார கருத்து வேற்றுமை என்ற போர்வையிலோ அராஜகவாதிகளின்
மறுபிறப்பாக இருப்பதைப் பார்க்கிறோம்" என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். சிறு நூல் எனினும் மிக காத்திரமானது. மனோன்மணீயம்
சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய
பேரா.
கா. அ. மணிக்குமாரின் வரலாற்றுப் புலமை வெளிப்பட்டுத் தெரியும் நூல்.
No comments:
Post a Comment