My Blog List

Tuesday, February 5, 2013

விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்



 விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம் 
அம்ல்கர் சுப்ரால்
 தமிழில் எஸ். பாலச்சந்திரன் 

கினியா மற்றும் கேப் வெர்டே மக்களின் விடுதலை மற்றும் ஒற்றுமைக்கான ஆப்பிரிக்கக் கட்சியை  நிறுவிய அமில்கர் கப்ரால், போர்ச்சுகலின்  காலனியாதிக்கத் திற்கெதிராகத் தொடர்ந்து போராடிய  தலைவர். அந்தக் காலனியக் கூலிப்படைகளால் 1973, ஜனவரி 20ம் நாள் கினியக் குடியரசின் தலைநகரில் கொல்லப்பட்டவர். அவரது இந்த உரை 1972, ஜூலை 3-7 தேதிகளில் பாரிஸில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் அமில்கரால் நிகழ்த்தப்பட்டது. "விடுதலைப் போராட்ட இயக்கங்கள், தமது தொடக்க நிலையிலேயே தொடர்ச்சியான பண்பாட்டு வெளிப்பாடுகளின் முத்திரையைக் கொண்டவை; அவ்வாறு இருப்பதால், ஒடுக்கப்பட்ட மக்களின் 'பண்பாட்டு மறுமலர்ச்சியைத் தொடர்ந்து இவை உருவாகின்றன. இப்பண்பாட்டுப் போராட்டம்தான் குறிப்பிட்ட தருணத்தில் அன்னிய அடக்குமுறையை எதிர்கொள்வதற்காகப் புதிய வடிவங்களை அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியாக எடுக்கிறது. விடுதலைப் போராட்ட இயக்கம், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுடைய உரிமைகளை வென்று பெறுவதற்கான இலட்சியங்களை நிலை நிறுத்தியாக வேண்டும். ஆகவே விடுதலைப் போராட்டத்தில் மட்டுமின்றி, மானிட முன்னேற்றத்திற்கான மாபெரும் போரிலும் அரசியல் கல்வி பயிற்சிக்கான ஆற்றல் வாய்ந்த கருவிகளாகப் பண்பாட்டு வெளிப்பாடுகள் மாறுகின்றன" என்பதாக நிறைவடைகிற இந்த உரை, ஆழமானது ஆராய்ந்து பயில வேண்டியது.

No comments:

Post a Comment