பட்டியல் சாதிகள்\
பழங்குடிகள்\ அரசு
ஆனந்த் டெல்டும்டே
தமிழில்: எஸ்.வி. ராஜதுரை
வெளியீடு. பாரதி புத்தகாலயம், ரூ.25
பட்டியல் சாதிகள், பழங்குடிகள் என்பன நிர்வாகம் சார்ந்த
அடையாளங்களே; காலனிய
ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டவையே இவை. அரசமைப்புச் சட்டநெறிகளைத் தீர்மானிக்க
மோதிலால்நேரு குழு அறிக்கையின் சாராம்சமான கோரிக்கைகள் இவை. சாதி, வர்க்க மத, பிரதேச வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து
ஆண்கள் பெண்களுக்கும் சம உரிமைகள், இலவசத் தொடக்கக் கல்வி, அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் முதலியன வழங்கப்பட வேண்டுமெனவும், மதச்சார்பின்மை என்பது அரசின் அடிப்படையான
பண்பிலொன்றாக இருக்க வேண்டும் என்றும் 'கோரிய இந்த அறிக்கையை அன்றைய பிரிட்டிஷ் அரசின் சைமன் குழு
நிராகரித்திருக்கிறது. 'இந்த நாட்டில் சமூக, பொருளாதார நீதி இருக்கும்படி செய்வதற்கு, தொழில்கள் தேசிய மய மாக்கப்பட வேண்டும்,
நிலம் தேசியமயமாக்கப்பட
வேண்டும். சமூக, பொருளாதார,
அரசியல் நீதியில்
நம்பிக்கை கொள்ளும் எந்தவோர் எதிர்கால அரசும், அதன் பொருளாதாரம் ஒரு சோசலிசப் பொருளாதாரமாக
இருந்தாலன்றி, அந்த நீதியை
எவ்வாறு செயல்படுத்தும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை' என்று 1946 ஜூன் 17 அன்று அரசமைப்பு அவையில் அண்ணல் அம்பேத்கர்
ஆற்றிய உரையை இந்நூல் மேற்கோள் காட்டுகிறது. ஆனால், பின்னர் அரசமைப்பு அவையில் அவரே இவற்றை
வலியுறுத்தவில்லை. காங்கிரசின் வர்க்க நலன்களுக்கும் ஆளும் முதலாளித்துவ
வர்க்கத்திற்கும் உகந்தவற்றை மட்டுமே இந்திய அரசு இன்றுவரை முன்னெடுத்து
வந்திருப்பதை நூல் சுட்டிக் காட்டுகிறது. பெரும்பாலான தலித்துகள், ஆதி வாசிகள் பிற ஏழை மக்கள் ஆகியோருக்கு
இவ்வமைப்பிற்குள் எந்தத் தீர்வும் கிடைக்காது. எனவே எந்தவொரு புனிதப் பசுவையும் விட்டு வைக்காது,
எல்லாவற்றையும்
கேள்விக்கு உட்படுத்தும் உணர்வில் தனது பணியைச் செய்திருப்பதாக ஆசிரியர்
கூறுகிறார். எஸ்.வி.ராஜதுரையின் ஆற்றொழுக்கான மொழியாக்கத்தில் 'புதுவிசை' இதழில் வெளியான ஒரு கட்டுரையின் நூல் வடிவம்
இது.
No comments:
Post a Comment