My Blog List

Monday, February 11, 2013

உணவு மக்களின் அடிப்படை உரிமை




உணவு; மக்களின் அடிப்படை உரிமை
பிருந்தா காரத் தமிழில்; ஆர். பெரியசாமி
 'உலகத்திலேயே இந்தியாவில்தான் சத்துணவு கிடைக்காத மக்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் உள்ளது. கிராமப்புற இந்தியாவில் நூற்றுக்கு எழுபது பேர் சத்துணவின்மையால் அவதிப்படுபவர்களே. சரத்பவார் தலைமையிலான உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது மாநிலங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டைக் குறைத்து, கோதுமைக்குப் பதிலாக தானியங்கள் ஒதுக்கீடு, சம்பூர்ண கிராம ரோஜ்கார் யோஜனா திட்டப்பணிகளுக்கான ஊதியத்தின் ஒரு பகுதியாக உணவுத் தானியங்கள் வழங்கும் முறை நீக்கம், வறட்சிப் பகுதிகளுக்கான ஒதுக்கீடுகள் குறைப்பு, உணவு தானியங்களின் விலை அதிகரிப்பு இப்படியான பல தடித்தனமான யோசனைகளை முன்னெடுத்துச் செல்லும் முனைப்பில் உள்ளது. உணவுக்கான மானியங்களை  குறைப்பதன் மூலமே நித்ப்பற்றாக்குறைக்கு முடிவு கட்ட ஒவ்வொரு மத்திய அரசும் முயல்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் கடைசியாகத்தான் சாப்பிட வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தமது தேவைக்குக் குறைந்த அளவுக்கே சாப்பிடுமாறு நேர்கிறது' என்றெல்லாம் பிருந்தா காரத் கடுமையான விமரிசனங்களை முன் வைக்கிறார். பசித்த வயி¤றுகளுக்கு உணவளிப்பதில் இத்தனை முட்டுக்கட்டைகள் போடும் மத்திய அரசு, ஏழை மக்களிடமிருந்து இம்மாதிரி கொள்ளையடித்து பெருவணிக நிறுவனங்களுக்கு அளித்த வரிச்சலுகை மட்டுமே ஆண்டிற்கு சுமார் 5 லட்சம் கோடி என்கிறார் அவர். உணவு மற்றும் பொது விநியோகம் ஆகிய அம்சங்களில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில அரசுகள் பாராட்டத்தக்க வகையில் செயல்படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த உணவுப் பாதுகாப்பு மசோதா ஏழைமக்களுக்கு கொடுப்பது குறைவு. எடுத்துக்கொள்வதோ மிக அதிகம். இந்நிலையில், இதை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் அணிகளும், தலைவர்களும், ஆதரவாளர்களும் போராடி வருவதை இந்நூல்  முழுவதிலும் பிருந்தா காரத் பதிவு செய்திருக்கிறார். அவருடைய எளிய, நேரடியான உரைகளை அதே தன்மைகளுடன் தமிழாக்கித் தந்திருக்கிறார் ஆர். பெரியசாமி.

No comments:

Post a Comment