My Blog List

Monday, February 11, 2013

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்




வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்
ஆர். நார்மன் தமிழில்: ச. சுப்பாராவ்
'வால்மார்ட்' என்ற பெயர் சமீபத்தில் இந்தியா முழுவதிலும்  பேசப்பட்ட ஒன்று. சில்லறை வணிகத்தில் கடை விரிக்கப்போகிற பன்னாட்டு பகாசுர நிறுவனம் இது. நமது ஊர் மளிகைக்கடைகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கையிலேயே அது  தலைநகரங்களில் கடைகள் கட்டத் தொடங்கியாயிற்று. அமெரிக்க நகரமான கிரீன் ஃபீல்டு எனும் சிறு நகரத்தில் வித்தியாசமான ஒரு தேர்தல் நடந்தது. ஒன்று அந்த ஊரின் அருகே இரு பெரும் நெடுஞ்சாலைகள். அங்கே 1, 23,000 சதுர அடியில் கடை கட்டுவதற்கு வால்மார்ட்டிற்கு 63 ஏக்கர் தொழிற்பேட்டை இடத்தை அளிக்கலாமா? இரண்டு பொதுவர்த்தக மாவட்டத்தில் 40,000 சதுர அடிக்கும் மேலான பெரிய கட்டிடத்தை அனுமதிக்கலாமா?  'வால்மார்ட்டை ஆதரித்தவர்கள் தங்களை 'வால்' என்றும், அதற்கு எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்த இந்நூலாசிரியரான ஆல்பர்ட் நார்ட்டன் உள்ளிட்டவர்கள் தங்களை வாலுக்கு எதிரானவர்கள் என்றும் அழைத்துக் கொண்டார்கள். எதிர்ப்பாளர்கள்,  'வாலை நிறுத்துங்கள். மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் 'இல்லை' என வாக்களியுங்கள்' என எழுதி வைத்தார்கள். வால்மார்ட் நிர்வாகம், கையெழுத்தில்லாத மொட்டைக் கடுதாசிகளை எல்லா வீடுகளுக்கும் அனுப்பியது. ஆனால் எங்கள் நகரத்தை நாங்கள் இழக்கிறோம்'  என்ற எதிர்ப்பிரச்சாரம்தான் மக்களின் மனதையும், அறிவையும் தொட்டது. வாக்கெடுப்பு முடிவில் 9 வாக்கு வித்தியாசத்தில் வால்மார்ட் தோற்றது. உள்ளூரில் வால்மார்ட்டை முறியடிக்க வேண்டுமானால் உள்ளூர் மக்கள்தான் களத்திலிறங்க வேண்டும். இறங்கினால் வெற்றி நிச்சயம். தமிழில் இந்த நூலைத் தந்திருப்பவர் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பாளியான ச. சுப்பாராவ். ஒவ்வொரு சிறு கடை உரிமையாளர் கையிலும் இப்புத்தகம் போய்ச் சேர்ந்தால், விளைவுகள் பிரம்மாண்டமாக இருக்கும்.

No comments:

Post a Comment