அரசும் -
புரட்சியும்
லெனின் தமிழில்: ரா.
கிருஷ்ணய்யா
லெனினின்
மேதைமைக்கும், புரட்சிகர உணர்வுக்கும் எடுத்துக்காட்டுகளாய்த் திகழும்
நூல்களுள் தனிச்சிறப்பான ஒன்று இது. அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது? 'வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன்
விளைவாய்த் தோன்றியதே அரசு' என்கிறார் லெனின். 'சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை
அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச்
சக்தியே அரசு எனப்படுவது' என்ற ஏங்கெல்சின் வரையறையை மேற்கோளிட்டுத் தொடர்கிறார் அவர். ஆயுதமேந்திய
படைவீரர்களும், சிறைகளும்,
இன்னபிற சக்திகளைக்
கொண்டு, ஒடுக்கப்பட்ட
வர்க்கத்தைச் சுரண்டவும் செய்கிற கருவி இது. புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத
தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பதும், பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியாமையை நொறுக்குவதும்' பாட்டாளி வர்க்கப் புரட்சியின்
இலட்சியங்கள். இந்த இலட்சிய ஈடேற்றத்தின்
விளைவாக அமைகிற அரசு மக்களுடையது. மக்களுக்கானது. இதுவும் ஒரு நாள். 'உலர்ந்து, உதிர வேண்டியதுதான்' என்கிறார் லெனின். அது எப்படி ஏன்? இதைத்தான் இந்த நூல் முழுவதிலும் லெனின்
விவாதித்திருக்கிறார்.
தேர்ந்த மொழழி பெயர்ப்பாளர் அமரர் ரா.
கிருஷ்ணய்யாவின் நடை நெருடல் இல்லாதது
No comments:
Post a Comment