காலனியம் - பிபன் சந்திரா
தமிழில் : அசோகன் முத்துசாமி.
காலனியக் கட்டமைப்பின் நான்கு அடிப்படையான
பண்புகளை பிபன் சந்திரா விரிவாக ஆராய்ந்து பார்த்ததன் வெளிப்பாடு இந்நூல். கடந்த 20 ஆண்டுகளில் அவர் எழுதி வந்த மிகச் சிறந்த
கட்டுரைகளின் தொகுப்பு. சமீபத்தில் மறைந்த தோழர் அசோகன் முத்துசாமியின் தெளிவான
மொழிப் பெயர்ப்பில் வெளியாகியுள்ளது. 'காலனியம் உலக முதலாளித்துவ அமைப்பிற்குச் சேவகம் புரிவது;
சமமற்ற பரிவர்த்தனை,
சரக்கு உற்பத்தியைத்
தனித்தனியாகப் பிரித்து அப்பகுதிகளை உலகச் சந்தையுடனும், காலனியாதிக்கப் பொருளாதாரத்துடனும் இணைப்பது;
காலனி நாடுகளின்
செல்வத்தைச் சுரண்டுவது அல்லது எதேச்சதிகாரமாகத் தங்கள் நாட்டிற்கு மடைமாற்றுவது
இக்கூறுகளைக் கொண்டது. உலக மயமாக்கல் சூழலில், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள்தாம் இந்தியாவின்
மிகப்பெரிய சமூக வர்க்கமாக ஆக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம், அந்நிய சக்திகளுடன் கைகோர்ப்பதையோ அல்லது
அந்நிய மூலதனத்திற்குத் தடையற்ற அனுமதி வழங்குவதையோ அல்லது பொருளாதாரத்தில் அரசின்
பாத்திரத்தைப் பலவீனப்படுத்துவதையோ தடுப்பதில் இடதுசாரிகள் குறித்த அச்சம் ஒரு
சக்திமிக்க காரணியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வேறொரு கோணத்தில்
இடதுசாரிகளின் பலவீனங்களால் எப்படி இந்தியப் பொருளாதாரத்தை முதலாளித்துவ சக்திகள்
தமது வர்க்க நலன்களை மட்டுமே பாதுகாக்கிற திசைவழிக்குத் திருப்பிவிட முடிந்துள்ளது
என தர்க்கரீதியாக விவாதிக்கிற அரியநூல் இது. 'காலனியம்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்திய காரணத்தையே காட்டி இடதுசாரி அறிவு ஜீவிகள்
பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி
நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதான ஒரு தகவல், இங்கே தொடர்ந்து இடதுசாரி எதிர்ப்பு
விஷங்கக்கிக் கொண்டிருக்கிற 'சுதந்திரமான' சிந்தனையாளர்களின்
கவனத்திற்குச் சமர்ப்பணம்.
No comments:
Post a Comment