இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் - 1880- 1905
-பேராசிரியர்
பிபன் சந்திரா தமிழில்; ச. சுப்பாராவ்
1963ல் தில்லி பல்கலைக் கழகத்திற்குச்
சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம். இருபத்தைந்து ஆண்டுகளில் (1880-1905)
பிபன் தன் ஆய்வின் மூலம்
மூன்று அம்சங்களை வெளிக் கொணர்ந்தார்.
வணிகம், தொழில், நிதித்துறை ஆகிய மூவகைப் பொருளாதாரச்
சுரண்டல்களைத் தேசியவாதிகள் கண்டறிந்தனர். இந்தியப் பொருளாதாரம் ஆங்கிலேயர்
பொருளாதார நலனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனாலேயே ஏகாதிபத்திய ஆட்சி
தொடர்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். இது முதல் விசயம். இரண்டு கச்சாப்
பொருட்கள் உற்பத்திக்கும், தமது நாட்டுப் பொருட்களின் விற்பனைக்கும் இந்தியாவைச் சந்தையாக மாற்றுவது;
காலனியப் பொருளாதார
அம்சங்களை வளர்ப்பது என்ற அந்நிய ஆட்சியாளர்களின் எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்த்தனர்.
மூன்று: அவ்வாறு எதிர்க்குரல் கொடுத்தபோது முன்
வைக்கப்பட்ட அனைத்துத் தேசியவாதிகளின் கோரிக்கைகளும், ஒரு சுதந்திர இந்தியாவில் தீர்மானிக்கப்படும்
தேசியப் பொருளாதாரக் கொள்கைக்கான விருப்பம் வேர் பிடிப்பதற்கு உதவின. ஆங்கிலேயர்
ஆட்சியில் அதிகரித்து வந்த ஏழ்மையை இத்தேசம் முதலில் உணர்வது அவசியம். அப்போதுதான்
அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியுமென ஓங்கிக் குரல் கொடுத்தவரும், அந்நியர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதே
இந்திய அரசியலின் தலையாய கோட்பாடக இருக்க வேண்டும் என்பதை அறிவித்தவருமான தாதாபாய்
நௌரோஜி மிதவாதியாக இருக்க முடியாதுÕÕ என்கிறார் அரவிந்தர். அந்நியர் ஆட்சியின சுமை குறித்தும், ஏழை மக்களின் துயரங்கள் குறித்தும் மனச்
சாட்சியுள்ள ஆங்கிலேய சிவில், இராணுவ அதிகாரிகள் விட்டுச் சென்ற குறிப்புகள், ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு Ôஇந்தியாவில் ஏழ்மையும், பிரிட்டனின் ஆட்சி இல்லாத தன்மையும்Õ என்றொரு நூல் நௌரோஜியால் எழுதப்பட்டவற்றின்
தொகுப்பாக 1901ல்
வெளியாகியிருக்கிறது. பிபன் சந்திராவின் நூலுக்கு முன்னுரையாக, தமிழ்நாட்டு ஆய்வாளர்களுள் ஒருவரான பேரா. கா.அ.
மணிக்குமார் எழுதியுள்ள கட்டுரை, மேற்கண்ட செய்திகள் அடங்கிய செறிவுமிக்க பதிவு. 671 பக்கங்கள் கொண்ட காத்திரமான ஆய்வு நூல்
பிபனுடையது. இப்பெரிய நூலின் வாசிப்புக்கான திறப்புக் குறிப்புரை (ரிமீஹ் ழிஷீtமீ கிபீபீக்ஷீமீssன் தமிழ்ப் பெயருக்கு, நன்றி: ச. தமிழ்ச் செல்வனுக்கு)யாக பேரா.
மணிக்குமாரின் கட்டுரை அமைந்திருக்கிறது. நௌரோஜியின் படைப்புகளிலேயே ஆகச்
சிறந்ததென அவர் எழுதிய Ôஇந்தியாவின் வறுமையை’க் குறிப்பிடுகிறார் பிபன். இந்திய தேசியம் உருவான காலகட்டத்தில், வறுமையைப் போன்று ஆள்வோர், ஆளப்படுவோர் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்திய பெருங்கோபத்தை
ஏற்படுத்திய பிரச்;னை, வேறெதுவுமில்லை என்கிறார் அவர். Ôமுரட்டு வேகத்தோடு இருக்கும் ஏகாதிபத்தியம்தான்
காட்டுமிராண்டித்தனம்Õ என்று 1904ம் ஆண்டு ஆகஸ்டில், ஹேக் கில் நடந்த சர்வதேச சோஷலிஸ காங்கிரசில்
தாதாபாய் நௌரோஜி கடுமையான வார்த்தைகளால் பிரிட்டிஷ் ஆட்சியைத் தாக்கி
உரையாற்றியதையும் நூலின் இறுதிப்பகுதியில் பிபன் மேற்கோள் காட்டுகிறார். அந்நிய
முதலாளியத்திற்கு எதிராக, சுதேசிகள் முன்வைத்த எல்லாவிதமான பொருளாதாரச்
சிந்தனைகளையும் மிக விரிவாக, ஆழமாக ஆராய்கிற நூல் இது. சுப்பாராவின் மொழி பெயர்ப்பு வெகு சரளமான நடையில்
அமைந்திருப்பது சிறப்பான அம்சம்.
No comments:
Post a Comment