My Blog List

Tuesday, February 5, 2013

பெடரல் இந்தியாவும் சமஸ்தான இந்தியாவும்


பெடரல் இந்தியாவும் சமஸ்தான இந்தியாவும்
 வெ.சாமிநாத சர்மா
 வரலாற்று ஆசிரியர்களின் பல நூல்கள் ஆய்வாளர்களை மனதிற் கொண்டே எழுதப்படுகின்றன. பரந்துபட்ட சாதாரண வாசகர்களுக்கு அவை எளிமையாக வாசிக்கக் கிடைப்பதுமில்லை. தமிழக வாசகர்கள் கார்ல் மார்க்ஸையும், இங்கர்சாலையும், பிளாட்டோ, சாக்ரடீஸ் உட்பட  உலகின் முக்கியமான அனைத்துச் சிந்தனையாளர்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்தவர்களுள் முன்னோடி சாமிநாதன். சுதேச சமஸ்தானங்கள் 562ன் அன்றைய நிலைமையை 'அலங்காரத் துருப்புகளின் அணிவகுப்பு, வறுமையின் மீது கட்டப்பெற்ற சில அரண்மனைகள், பழைய சம்பிரதாயங்களின் சின்னங்கள் ஆகிய இவற்றைத் தவிர வேறு மாறுதலை காண்பதெங்ஙனம்?' என்ற ஒரு வாக்கியத்தில் மனக்கண்முன் கொணர்ந்து விடுகிறார். பெடரல் இந்தியா என்ற அடுத்த பகுதி பிரிட்டிஷார் முன்வைத்து நடைமுறைப்படுத்திய மாகாணப் பொறுப்பாட்சி முறையின் அனைத்து அம்சங்களையும் தெளிவாக விளக்குகிறது. இறுதி ஒரு வரியில், அனைத்தையும் உடைத்து நொறுக்கவும் செய்கிறார். "எப்படியாயினும், பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் எதிர்பார்க்கப்பட்டபடி, மாகாணப் பொறுப்பாட்சியானது, கொட்டு முழக்கோடே கோலாகலக்தோடே பவனி வரவில்லையென்பது தெளிவாகிவிட்டது."

No comments:

Post a Comment