My Blog List

Monday, February 11, 2013

. மார்க்சிய மூலநூல் வாசிப்புக்கு ஒரு கையேடு




 மார்க்சிய மூலநூல் வாசிப்புக்கு ஒரு கையேடு
மாரிஸ் கார்ன்ஃ போர்த்  தமிழில்: திருப்பூர் மிலிட்டரி பொன்னுசாமி.
 சமகாலச் சூழலில், மார்க்சியம் எதிர்கொள்வது போன்ற நெருக்கடிகளை வேறு எந்த ஓர் அரசியல் தத்துவமாவது எந்தச் சூழலிலாவது எதிர்கொண்டிருக்குமா? எதிரிகளால் கூட அல்ல, 'நண்பர்கள் போன்று நடிப்பவர்களாலும்', உள்ளிருந்தே உலைவைக்கிற உலுத்தர்களாலும்தான் இன்று பெரும் இடையூறுகள் வருகின்றன. எனினும், மார்க்சியம் காலாவதியாகி விடவில்லை. மாறாக, இன்று உலகெங்கும் மறுவாசிப்புக்கு மார்க்சிய நூல்களைத் தேடியலைகிற தேடல்தான் அதிகரித்துள்ளது. இச்சூழலில், மார்க்சிய மூலநூல்களின் வாசிப்பை 'எங்கிருந்து தொடங்குவது?' மார்க்சியம் ஓர் உயிரற்ற, பொருளற்ற சூத்திரமல்ல; மாறாக, அது ஓர் உண்மை நிகழ்முறை எதார்த்த உண்மை. அத்தகைய மார்க்சிய லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள 'கற்பனாவாத சோஷலிஸமும் அறிவியல் சோஷலிஸமும், நூலில் தொடங்கி, படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளில் வாசிக்க வேண்டியவற்றை, வெறுமனே பெயர்ப்பட்டியலாகத் தராமல் எளிய சுருக்கமான விளக்கக் குறிப்புகளுடன் தந்திருக்கிறார் ஆசிரியர். 'அரசும்- புரட்சியும்' 'என்ன செய்ய வேண்டும், கிராமப்புற ஏழை மக்களுக்கு, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்த (நூல்களின்) நதி மகாநதி, என்றும் வற்றாதது. இறங்கி நீராடப் படித்துறைதான் இக்கையேடு. 

No comments:

Post a Comment