காவிரி \ பிரச்சனையின் வேர்கள் வெ. ஜீவகுமார்
காவிரி நடுவர் மன்றம், தன் இறுதி உத்தரவை 2007ம் ஆண்டே வழங்கிவிட்டது. இன்று வரை அது
அரசிதழில் வெளியிடப்படவில்லை. சம்மந்தப்பட்ட மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றுதான்
வலியுறுத்துகின்றன. ஆனால் உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் செய்த பிறகும் மத்திய
அரசு அதற்குத் தயாராக இல்லை. கர்நாடகமும் கூட தனக்கு ஆட்சேபனை இல்லை என்று
சொல்லிவிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் தகராறு செய்யத் தொடங்கிவிட்டது. Ôமச்சு மச்சா நெல் விளையும், மகுடஞ் சம்பா போரேறும், குச்சு குச்சா நெல் விளையும் குமுடஞ் சம்பா
போரேறும்Õ என்று காவிரியின்
மகசூலை பழைய நாட்டுப்பாடல் குறிக்கிறது. பேச்சுவார்த்தை, நிர்வாக நடவடிக்கைகள், சட்டபூர்வமான முயற்சிகள் என தமிழ்நாடு
மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும் மிக ஆதாரபூர்வமான சான்றுகளுடன் பதிவு
செய்திருக்கிறார் ஜீவகுமார். உணர்ச்சிவயப்பட்ட, ஆத்திரமூட்டும் சொற்கள் இல்லை. மிகவும்
நிதானமான பொறுப்புமிக்க குரல் ஒலிக்கும் ஆவணம் இது. காவேரி நடக்கவும், ஓடவும், வாழவும் வேண்டும். அப்போதுதான் 2 கோடி மக்களின் சாகுபடிப் பிரச்சனை, 5 கோடிப் பேரின் குடிநீர்த் தேவை, 12 இலட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்களின்
வாழ்வாதார அடிப்படை இவையாவும் தீரும் என்று உணர்த்துகிற ஆவணம்.
No comments:
Post a Comment