My Blog List

Monday, February 11, 2013

இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியு


இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் - 1880- 1905

-பேராசிரியர் பிபன் சந்திரா தமிழில்; ச. சுப்பாராவ்
 1963ல் தில்லி பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம். இருபத்தைந்து ஆண்டுகளில் (1880-1905) பிபன் தன் ஆய்வின் மூலம் மூன்று அம்சங்களை  வெளிக் கொணர்ந்தார். வணிகம், தொழில், நிதித்துறை ஆகிய மூவகைப் பொருளாதாரச் சுரண்டல்களைத் தேசியவாதிகள் கண்டறிந்தனர். இந்தியப் பொருளாதாரம் ஆங்கிலேயர் பொருளாதார நலனுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதனாலேயே ஏகாதிபத்திய ஆட்சி தொடர்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். இது முதல் விசயம். இரண்டு கச்சாப் பொருட்கள் உற்பத்திக்கும், தமது நாட்டுப் பொருட்களின் விற்பனைக்கும் இந்தியாவைச் சந்தையாக மாற்றுவது; காலனியப் பொருளாதார அம்சங்களை வளர்ப்பது என்ற அந்நிய ஆட்சியாளர்களின் எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்த்தனர்.
 மூன்று: அவ்வாறு எதிர்க்குரல் கொடுத்தபோது முன் வைக்கப்பட்ட அனைத்துத் தேசியவாதிகளின் கோரிக்கைகளும், ஒரு சுதந்திர இந்தியாவில் தீர்மானிக்கப்படும் தேசியப் பொருளாதாரக் கொள்கைக்கான விருப்பம் வேர் பிடிப்பதற்கு உதவின. ஆங்கிலேயர் ஆட்சியில் அதிகரித்து வந்த ஏழ்மையை இத்தேசம் முதலில் உணர்வது அவசியம். அப்போதுதான் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியுமென ஓங்கிக் குரல் கொடுத்தவரும், அந்நியர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதே இந்திய அரசியலின் தலையாய கோட்பாடக இருக்க வேண்டும் என்பதை அறிவித்தவருமான தாதாபாய் நௌரோஜி மிதவாதியாக இருக்க முடியாதுÕÕ என்கிறார் அரவிந்தர். அந்நியர் ஆட்சியின  சுமை குறித்தும், ஏழை மக்களின் துயரங்கள் குறித்தும் மனச் சாட்சியுள்ள ஆங்கிலேய சிவில், இராணுவ அதிகாரிகள் விட்டுச் சென்ற குறிப்புகள், ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு Ôஇந்தியாவில் ஏழ்மையும், பிரிட்டனின் ஆட்சி இல்லாத தன்மையும்Õ என்றொரு நூல் நௌரோஜியால் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாக 1901ல் வெளியாகியிருக்கிறது. பிபன் சந்திராவின் நூலுக்கு முன்னுரையாக, தமிழ்நாட்டு ஆய்வாளர்களுள் ஒருவரான பேரா. கா.அ. மணிக்குமார் எழுதியுள்ள கட்டுரை, மேற்கண்ட செய்திகள் அடங்கிய செறிவுமிக்க பதிவு. 671 பக்கங்கள் கொண்ட காத்திரமான ஆய்வு நூல் பிபனுடையது. இப்பெரிய நூலின் வாசிப்புக்கான திறப்புக் குறிப்புரை (ரிமீஹ் ழிஷீtமீ கிபீபீக்ஷீமீssன் தமிழ்ப் பெயருக்கு, நன்றி: ச. தமிழ்ச் செல்வனுக்கு)யாக பேரா. மணிக்குமாரின் கட்டுரை அமைந்திருக்கிறது. நௌரோஜியின் படைப்புகளிலேயே ஆகச் சிறந்ததென அவர் எழுதிய Ôஇந்தியாவின் வறுமையை’க் குறிப்பிடுகிறார் பிபன். இந்திய தேசியம் உருவான காலகட்டத்தில், வறுமையைப் போன்று ஆள்வோர், ஆளப்படுவோர் இடையே பெரும்  இடைவெளியை ஏற்படுத்திய பெருங்கோபத்தை ஏற்படுத்திய பிரச்;னை, வேறெதுவுமில்லை என்கிறார் அவர். Ôமுரட்டு வேகத்தோடு இருக்கும் ஏகாதிபத்தியம்தான் காட்டுமிராண்டித்தனம்Õ என்று 1904ம் ஆண்டு ஆகஸ்டில், ஹேக் கில் நடந்த சர்வதேச சோஷலிஸ காங்கிரசில் தாதாபாய் நௌரோஜி கடுமையான வார்த்தைகளால் பிரிட்டிஷ் ஆட்சியைத் தாக்கி உரையாற்றியதையும் நூலின் இறுதிப்பகுதியில் பிபன் மேற்கோள் காட்டுகிறார். அந்நிய முதலாளியத்திற்கு  எதிராக, சுதேசிகள் முன்வைத்த எல்லாவிதமான பொருளாதாரச் சிந்தனைகளையும் மிக விரிவாக, ஆழமாக ஆராய்கிற நூல் இது. சுப்பாராவின் மொழி பெயர்ப்பு வெகு சரளமான நடையில் அமைந்திருப்பது சிறப்பான அம்சம்.

வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்




வால்மார்ட்டை விரட்டி அடிப்போம்
ஆர். நார்மன் தமிழில்: ச. சுப்பாராவ்
'வால்மார்ட்' என்ற பெயர் சமீபத்தில் இந்தியா முழுவதிலும்  பேசப்பட்ட ஒன்று. சில்லறை வணிகத்தில் கடை விரிக்கப்போகிற பன்னாட்டு பகாசுர நிறுவனம் இது. நமது ஊர் மளிகைக்கடைகள் கையைப் பிசைந்து கொண்டிருக்கையிலேயே அது  தலைநகரங்களில் கடைகள் கட்டத் தொடங்கியாயிற்று. அமெரிக்க நகரமான கிரீன் ஃபீல்டு எனும் சிறு நகரத்தில் வித்தியாசமான ஒரு தேர்தல் நடந்தது. ஒன்று அந்த ஊரின் அருகே இரு பெரும் நெடுஞ்சாலைகள். அங்கே 1, 23,000 சதுர அடியில் கடை கட்டுவதற்கு வால்மார்ட்டிற்கு 63 ஏக்கர் தொழிற்பேட்டை இடத்தை அளிக்கலாமா? இரண்டு பொதுவர்த்தக மாவட்டத்தில் 40,000 சதுர அடிக்கும் மேலான பெரிய கட்டிடத்தை அனுமதிக்கலாமா?  'வால்மார்ட்டை ஆதரித்தவர்கள் தங்களை 'வால்' என்றும், அதற்கு எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுத்த இந்நூலாசிரியரான ஆல்பர்ட் நார்ட்டன் உள்ளிட்டவர்கள் தங்களை வாலுக்கு எதிரானவர்கள் என்றும் அழைத்துக் கொண்டார்கள். எதிர்ப்பாளர்கள்,  'வாலை நிறுத்துங்கள். மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் 'இல்லை' என வாக்களியுங்கள்' என எழுதி வைத்தார்கள். வால்மார்ட் நிர்வாகம், கையெழுத்தில்லாத மொட்டைக் கடுதாசிகளை எல்லா வீடுகளுக்கும் அனுப்பியது. ஆனால் எங்கள் நகரத்தை நாங்கள் இழக்கிறோம்'  என்ற எதிர்ப்பிரச்சாரம்தான் மக்களின் மனதையும், அறிவையும் தொட்டது. வாக்கெடுப்பு முடிவில் 9 வாக்கு வித்தியாசத்தில் வால்மார்ட் தோற்றது. உள்ளூரில் வால்மார்ட்டை முறியடிக்க வேண்டுமானால் உள்ளூர் மக்கள்தான் களத்திலிறங்க வேண்டும். இறங்கினால் வெற்றி நிச்சயம். தமிழில் இந்த நூலைத் தந்திருப்பவர் சிறந்த ஓர் இலக்கியப் படைப்பாளியான ச. சுப்பாராவ். ஒவ்வொரு சிறு கடை உரிமையாளர் கையிலும் இப்புத்தகம் போய்ச் சேர்ந்தால், விளைவுகள் பிரம்மாண்டமாக இருக்கும்.

உணவு மக்களின் அடிப்படை உரிமை




உணவு; மக்களின் அடிப்படை உரிமை
பிருந்தா காரத் தமிழில்; ஆர். பெரியசாமி
 'உலகத்திலேயே இந்தியாவில்தான் சத்துணவு கிடைக்காத மக்களின் எண்ணிக்கை மிகப் பெருமளவில் உள்ளது. கிராமப்புற இந்தியாவில் நூற்றுக்கு எழுபது பேர் சத்துணவின்மையால் அவதிப்படுபவர்களே. சரத்பவார் தலைமையிலான உணவு மற்றும் பொது விநியோகத் துறையானது மாநிலங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டைக் குறைத்து, கோதுமைக்குப் பதிலாக தானியங்கள் ஒதுக்கீடு, சம்பூர்ண கிராம ரோஜ்கார் யோஜனா திட்டப்பணிகளுக்கான ஊதியத்தின் ஒரு பகுதியாக உணவுத் தானியங்கள் வழங்கும் முறை நீக்கம், வறட்சிப் பகுதிகளுக்கான ஒதுக்கீடுகள் குறைப்பு, உணவு தானியங்களின் விலை அதிகரிப்பு இப்படியான பல தடித்தனமான யோசனைகளை முன்னெடுத்துச் செல்லும் முனைப்பில் உள்ளது. உணவுக்கான மானியங்களை  குறைப்பதன் மூலமே நித்ப்பற்றாக்குறைக்கு முடிவு கட்ட ஒவ்வொரு மத்திய அரசும் முயல்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண்கள் கடைசியாகத்தான் சாப்பிட வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தமது தேவைக்குக் குறைந்த அளவுக்கே சாப்பிடுமாறு நேர்கிறது' என்றெல்லாம் பிருந்தா காரத் கடுமையான விமரிசனங்களை முன் வைக்கிறார். பசித்த வயி¤றுகளுக்கு உணவளிப்பதில் இத்தனை முட்டுக்கட்டைகள் போடும் மத்திய அரசு, ஏழை மக்களிடமிருந்து இம்மாதிரி கொள்ளையடித்து பெருவணிக நிறுவனங்களுக்கு அளித்த வரிச்சலுகை மட்டுமே ஆண்டிற்கு சுமார் 5 லட்சம் கோடி என்கிறார் அவர். உணவு மற்றும் பொது விநியோகம் ஆகிய அம்சங்களில் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநில அரசுகள் பாராட்டத்தக்க வகையில் செயல்படுகின்றன என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த உணவுப் பாதுகாப்பு மசோதா ஏழைமக்களுக்கு கொடுப்பது குறைவு. எடுத்துக்கொள்வதோ மிக அதிகம். இந்நிலையில், இதை எதிர்த்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் அணிகளும், தலைவர்களும், ஆதரவாளர்களும் போராடி வருவதை இந்நூல்  முழுவதிலும் பிருந்தா காரத் பதிவு செய்திருக்கிறார். அவருடைய எளிய, நேரடியான உரைகளை அதே தன்மைகளுடன் தமிழாக்கித் தந்திருக்கிறார் ஆர். பெரியசாமி.

அம்பேத்கரின் இன்றைய தேவை


அம்பேத்கரின் இன்றைய தேவை
ஜி. இராமகிருஷ்ணன்
'முக்கியமான தொழிற்சாலைகளும், பணிகளும் அரசுடைமையானவையாக இருக்க வேண்டும். காப்பீட்டுத் தொழில் பொதுத்துறையில் இருக்க வேண்டும். தனியார் துறையும், தொழிற்சாலைகளும் பொருளாதாரத்தில் ஒரு பங்கு வகிக்கலாம். ஆனால் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. நிலம் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும். விவசாயத்தில் கூட்டுறவுப் பண்ணைத் திட்டத்தை அறிமுகம் செய்து சிறு விவசாயிகளையும் அதில் இணைத்துக் கொள்ள வேண்டும்' என்றெல்லாம் வலியுறுத்திய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஜி. இராமகிருஷ்ணன் நிகழ்த்தியிருக்கிறார். இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் நிலவுகிற தீண்டாமைக் கொடுமைகளின் பட்டியலை அதன் அனைத்து வடிவங்களிலும் தலையிட்டு அவற்றை அம்பலப்படுத்துகிற உரை இது. இந்துவாகப் பிறந்திருந்த போதிலும், சாதீய மனுதர்மப் பாகுபாடுகளின் உறைவிடமாகியிருக்கும் அந்த இந்துமதத்தைத் துறந்து பௌத்தம் தழுவியவர் டாக்டர் அம்பேத்கர். சிறிய  கையடக்க வடிவில் செறிவான சிந்தனைத் தொகுப்பு.

தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம்




தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
 பி. சுந்தரய்யா தமிழில்: என். ராமகிருஷ்ணன்
 இந்திய மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கம் முளைத்தெழுந்த நாளில் இருந்து, அது நடத்திய போராட்டங்கள் எண்ணற்றவை. ஆந்திர மாநிலத்தில், 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்திருந்த சுமார் 30 லட்சம் விவசாய மக்கள், கம்யூனிஸ்டுகளின் தலைமையில் ஐந்து ஆண்டுகள் வரை நடத்திய ஆயுதந்தாங்கிய போராட்டம் இது. நல்கொண்டா, வாரங்கால், கம்மம் ஆகிய மூன்று  மாவட்டங்களில் கிராம ராஜ்யமே அமைந்தது எனலாம். முதலில் ஹைதராபாத் நிஜாமின் ரஜாக்கர்கள் போலீஸ், பின் இந்திய அரசின் போலீஸ், ராணுவம் இவை அனைத்தையும் எதிர்த்து விவசாய மக்களின் ஆயுத எழுச்சியாக இது நடந்தது. விவசாய சீர்திருத்தங்கள், குறைந்த பட்சக்கூலி, குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல முயற்சிகளை அரைகுறையாகவாவது அரசாங்கம் மேற்கொள்ள இப்போராட்டம் வகை செய்தது. சர்வோதயா இயக்கத் தலைவர் வினோபா பாவே, 'பூதான' இயக்கத்தை முன்னெடுத்தது இந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான். மொழி வழி அடிப்படையில் மாநிலங்கள் சீரமைக்கப்பட வேண்டுமென்று இந்திய அரசை நெருக்கியதில் இதற்கு ஒரு பெரும் பங்குண்டு. கேரளாவின் புன்னப்புரா வயலாரிலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் இவ்வாறு கட்சி நடத்திய போராட்டங்கள¤ன் விளைவாகவே தேசிய அரசியல் வானில் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி உருவாகியது; 1952-ம்  ஆண்டின் பொதுத் தேர்தலின் போது முதல் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும் எதிர்க்கட்சிக் குழுவாகவும் இடம் பெற்றது. இத்தகைய ஒரு மகத்தான போராட்டத்தை வழி நடத்தியவர்களுள் ஒருவரான தோழர் பி. சுந்தரய்யா, தனது நேரடி அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய 600 பக்க ஆவணத்தின் சுருக்கமே  இந்நூல். இது 'சோஷியல் சயன்டிஸ்ட்' இதழில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றது. 65க்கு மேற்பட்ட இடதுசாரி இயக்கம் சார்ந்த நூல்களை எழுதிய என். ராமகிருஷ்ணன் இதைத் தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.

காவிரி \ பிரச்சனையின் வேர்கள் வெ. ஜீவகுமார்
 காவிரி நடுவர் மன்றம், தன் இறுதி உத்தரவை 2007ம் ஆண்டே வழங்கிவிட்டது. இன்று வரை அது அரசிதழில் வெளியிடப்படவில்லை. சம்மந்தப்பட்ட மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றுதான் வலியுறுத்துகின்றன. ஆனால் உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் செய்த பிறகும் மத்திய அரசு அதற்குத் தயாராக இல்லை. கர்நாடகமும் கூட தனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் தகராறு செய்யத் தொடங்கிவிட்டது. Ôமச்சு மச்சா நெல் விளையும், மகுடஞ் சம்பா போரேறும், குச்சு குச்சா நெல் விளையும் குமுடஞ் சம்பா போரேறும்Õ என்று காவிரியின் மகசூலை பழைய நாட்டுப்பாடல் குறிக்கிறது. பேச்சுவார்த்தை, நிர்வாக நடவடிக்கைகள், சட்டபூர்வமான முயற்சிகள் என தமிழ்நாடு மேற்கொண்ட அனைத்து செயல்பாடுகளையும் மிக ஆதாரபூர்வமான சான்றுகளுடன் பதிவு செய்திருக்கிறார் ஜீவகுமார். உணர்ச்சிவயப்பட்ட, ஆத்திரமூட்டும் சொற்கள் இல்லை. மிகவும் நிதானமான பொறுப்புமிக்க குரல் ஒலிக்கும் ஆவணம் இது. காவேரி நடக்கவும், ஓடவும், வாழவும் வேண்டும். அப்போதுதான் 2 கோடி மக்களின் சாகுபடிப் பிரச்சனை, 5 கோடிப் பேரின் குடிநீர்த் தேவை, 12 இலட்சம் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதார அடிப்படை இவையாவும் தீரும் என்று உணர்த்துகிற ஆவணம்.

அரசும் - புரட்சியும்




அரசும் - புரட்சியும்
லெனின் தமிழில்: ரா. கிருஷ்ணய்யா
லெனினின் மேதைமைக்கும், புரட்சிகர  உணர்வுக்கும் எடுத்துக்காட்டுகளாய்த் திகழும் நூல்களுள் தனிச்சிறப்பான ஒன்று இது. அரசு என்கிற நிறுவனத்தின் தோற்றம், எதன் பொருட்டு நிகழ்ந்தது? 'வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு' என்கிறார்  லெனின். 'சமுதாயத்திலிருந்து உதித்ததுதான், ஆனாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொள்கிறது. மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது' என்ற ஏங்கெல்சின் வரையறையை மேற்கோளிட்டுத் தொடர்கிறார் அவர். ஆயுதமேந்திய படைவீரர்களும், சிறைகளும், இன்னபிற சக்திகளைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டவும் செய்கிற கருவி இது. புல்லுருவியாய் வளர்ந்து வேண்டாத தசைப் பிண்டமாய் அமைந்த அரசு அதிகாரத்தை ஒழிப்பதும், பழைய, முதலாளித்துவ அரசுப் பொறியாமையை நொறுக்குவதும்' பாட்டாளி வர்க்கப் புரட்சியின் இலட்சியங்கள்.  இந்த இலட்சிய ஈடேற்றத்தின் விளைவாக அமைகிற அரசு மக்களுடையது. மக்களுக்கானது. இதுவும் ஒரு நாள். 'உலர்ந்து, உதிர வேண்டியதுதான்' என்கிறார் லெனின். அது எப்படி ஏன்? இதைத்தான் இந்த நூல் முழுவதிலும் லெனின் விவாதித்திருக்கிறார்.
 தேர்ந்த மொழழி பெயர்ப்பாளர் அமரர் ரா. கிருஷ்ணய்யாவின் நடை நெருடல் இல்லாதது